Enable Javscript for better performance
பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே செவ்வாய்க்கிழமை மாலை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருளானந்தபுரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி ஜயமணி (64). இவர் குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரே உள்ள கண்ணன் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஜயமணி கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai