Enable Javscript for better performance
உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

    By  தஞ்சாவூர்  |   Published on : 25th April 2013 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
     இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கு. கலைச்செல்வன் மேலும் தெரிவித்திருப்பது:
     வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.
     எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர்களுக்கு ரூ. 300-ம், பிளஸ் 2 படித்தவர்களுக்கு
     ரூ. 375-ம், பட்டதாரிகளுக்கு ரூ. 450-ம் உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
     உதவித்தொகை பெறும் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதிகளின்
     அடிப்படையில் பணிவாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்த எஸ்.சி. பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
     இதுவரை உதவித்தொகை பெற்றுக் கொள்ளாத மாற்றுத் திறனாளிகள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
     வேலைவாய்ப்பற்ற அலுவலகத்துக்கு வரும்போது அனைத்து கல்வி சான்றுகள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, புகைப்படம், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்களது பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
     தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதியோர் ஓய்வூதியம் ரூ. 1,000 பெறுபவர்கள் வரத் தேவையில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai