Enable Javscript for better performance
கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி - Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

    By  தஞ்சாவூர்,  |   Published on : 25th April 2013 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் வழங்கினார். விழாவில் அவர் பேசியது:
     ஒரு நாடு வளம் பெற்ற நாடாக மாற வேண்டுமானால் அந்நாட்டில் மனித வளத்தை அறிவுசார்ந்த மனித வளமாக மாற்ற வேண்டும். இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
     தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 36 கலை, அறிவியல் கல்லூரிகள், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 2 கால்நடை கல்லூரிகள் என மொத்தம் 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
     கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1.21 லட்சம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அதில், கல்வித் துறைக்கு மட்டும் ஏறத்தாழ ரூ. 17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, மொத்த வரவு - செலவு திட்டத்தில் ஏழில் ஒரு பங்கு.
     நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1.41 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டு அதிக அளவில் ஆங்கில வழி தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் வைத்திலிங்கம்.
     விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசுகையில், பேராவூரணி கலை, அறிவியல் கல்லூரியை வரும் கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
     பின்னர், 1,209 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
     சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதா ராணி ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ப. பிரபா வரவேற்றார். பேராசிரியர் ஜி. வாசுகி நன்றி கூறினார்.
     இதையடுத்து, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் 762 மாணவ, மாணவிகளுக்கும், ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் உறுப்புக் கல்லூரியில் 763 மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai