Enable Javscript for better performance
கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     நாகர்கோவிலில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
     அவரைத் தாக்கியவர்களை உடனடியாக போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் பாஜகவினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ரவிக்குமார் கண்டன உரையாற்றினார்.
     ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் ராஜா, சிவசேனை மாநில துணைத் தலைவர் துரை. திருவேங்கடம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai