Enable Javscript for better performance
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரைப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
     இந்தக் கோவிலில் சித்திரைப் பெருவிழா ஏப். 16-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை பல்லக்கு, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தன.
     இந்நிலையில், புதன்கிழமை காலை ஐயாறப்பர், அறம்வளம் நாயகி திருத்தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, பகல் 11 மணியளவில் திருத்தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து 4 வீதிகளில் வலம் வந்த திருத்தேர் இரவு 7 மணியளவில் நிலைக்கு வந்தது. இதில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி உள்பட ஏராளமானோர் வடம் பிடித்து இழுóததனர்.இதையடுத்து, சனிக்கிழமை சப்தஸ்தான விழா நடைபெறவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai