Enable Javscript for better performance
நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     கடந்த ஏப். 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவில் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
     விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரில் உத்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமப்புற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவிலிருந்தே பால்குடம் மற்றும் பல்வேறு காவடிகள் எடுத்து வந்தனர்.
     தேரோட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai