Enable Javscript for better performance
மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உலக புவி நாளையொட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை, பிரிக்ஸ் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
     பல்கலைக்கழக இணை துணைவேந்தர் தவமணி மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவைத் தொடக்கிவைத்தார்.
     பல்கலைக்கழகப் பதிவாளர் மு. அய்யாவு, கல்விப்புல முதன்மையர் எம். அசோக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ். சிட்டிபாபு, வீரமணி மோகனா உயராய்வு மைய இயக்குநர் எலிசபெத் உள்ளிட்டோர் மரக் கன்றுகளை நட்டனர்.
     பேராசிரியர்கள் எஸ். குமரன், குமரேசன், வெ. சுகுமாறன், ஸ்னேசியா, சாந்தி ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் அனைத்து வகுப்பறைகளிலும் விழிப்புணர்வு உறுதிமொழி வாசித்து துண்டறிக்கைகளை விநியோகித்தனர். மேலும், மாணவர்கள் ஆற்றல் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த மாதிரிகளை உருவாக்கி காட்சிக்கு வைத்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai