Enable Javscript for better performance
மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் அணைக்காடு கருணை இல்லத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     இந்த இல்லத்திலுள்ள ஆதரவற்ற 65 பள்ளிக் குழந்தைகளை டாக்டர் சி.வி. பத்மானந்தன் பரிசோதித்து சிகிச்சையளித்தார். இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் பேஸ்ட், பிரஷ், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன.
     ரோட்டரி சங்கத் தலைவர் பி. செல்வராஜ், செயலர் வி. பிரகலாதன், நிர்வாகிகள் ஜி. தேவசகாயம், டி. குமாரசாமி, வழக்குரைஞர் ஆர். ஜயவீரபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஜெ. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai