Enable Javscript for better performance
ஆதிகைலாசநாதர் கோவில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    : பட்டுக்கோட்டையில் பூமல்லியார் குளம் அருகிலுள்ள மங்களாம்பிகா உடனுறை ஆதி கைலாசநாதர் சுவாமி கோவில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

    தஞ்சை மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த இக்கோவிலின் குடமுழுக்கு 90 ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்திருந்த கோவில் முழுவதுமாக அகற்றப்பட்டு, பாலாலயம் செய்து புதிதாக கோவில் நிர்மாணப் பணிகள் தொடங்கின.

    கைலாசநாதர், மங்களாம்பிகா, விநாயகர், சுப்பிரமணியர், கஜலெட்சுமி, சண்டிகேசுவரர், சொர்ண ஆகர்ஷ பைரவர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள்  சன்னிதிகளும், கோவில் ராஜகோபுரமும் ரூ. 2.25 கோடியில் கட்டப்பட்டன.

    குடமுழுக்கு விழாவையொட்டி, ஏப். 22 தொடங்கி 25 வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்று வியாழக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

    ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத் தலைவர் வழக்குரைஞர் கே. விவேகானந்தன், கோவில் நிர்வாக அதிகாரி எஸ். மாதவன் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai