Enable Javscript for better performance
இளநிலை உதவியாளர் பணிக்கு ஆணைகள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட இளநிலை உதவியாளர் 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கடந்தாண்டு ஜூலை மாதம் தேர்வு நடத்தப்பட்டு பல்வேறு துறைகளுக்கு இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு அரசு துறைகள் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி முடிந்ததும் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் ஓதுக்கப்பட்டனர். அதன்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு 8 பேர் ஒதுக்கப்பட்டனர்.

    கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அலுவலர் நாகராஜன் 8 பேருக்கும் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai