Enable Javscript for better performance
ஏப்.28-ல் குடந்தையில் மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் சிட்டியூனியன் வங்கி லிட், கும்பகோணம் எஸ்.டி.மருத்துவமனை, சென்னை மாத்யம தர்ம சமாஜம் மற்றும் இன்டக்ரேடட் எண்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ஏப். 28-ல் இலவச பொது மருத்துவ முகாமை நடத்துகின்றன.

    அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குடந்தை எஸ்.டி. மருத்துவமனையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    இம்முகாமில் பொதுமருத்துவடன், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி, எக்ஸ்ரே, சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் சிறந்த மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவர்கள் இம்முகாமில் பங்கேற்கின்றனர்.

    ஏற்பாடுகளை குடந்தை மருத்துவர்கள் எஸ். தியாகராஜன், கே. வெங்கட்ரமான், சென்னை மருத்துவர் என். கோபாலன், கண் மருத்துவர் அரவிந்த் ஆகியோர் செய்கின்றனர். சென்னை மாத்யம தர்ம சமாஜம் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன், கும்பகோணம் இண்டக்ரேடட் எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி. வைத்யநாதன் பங்கேற்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai