Enable Javscript for better performance
குடந்தை பவானி அம்மன் கோவில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் பவானி அம்மன்கோவிலில் வியாழக்கிழமை  குடமுழுக்கு நடைபெறறது.

    கும்பேஸ்வரர் தெற்குவீதியில் உள்ள இந்தக் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 23-ம் தேதி காலை பூர்வாங்க பூஜை தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ஏப். 24-ல் 2,3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் வியாழக்கிழமை காலை புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai