திருவையாறில் உப்பு சத்தியாகிரக யாத்திரைக்கு வரவேற்பு
By தஞ்சாவூர் | Published on : 26th April 2013 02:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை உப்பு சத்தியாகிரக யாத்திரையை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.
தமிழக உப்பு சத்தியாக்கிரக நினைவு யாத்திரை கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் அண்மையில் திருச்சியில் தொடங்கியது. இந்த யாத்திரை கல்லணை, திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறுக்கு வியாழக்கிழமை வந்தது.
இந்த யாத்திரை குழுவினரை காங்கிரஸ் தொண்டர்கள் சுப்பையன், தொன்போஸ்கோ, வழக்குரைஞர் முருகராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியபெருமாள், தாமஸ், குழந்தைசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், இந்த யாத்திரை திருவையாறில் இருந்து கணடியூர், தஞ்சாவூர், பாபநாசம் வழியாக கும்பகோணத்துக்கு செல்கிறது.
ஏப். 30-ல் வேதாரண்யம் சென்றடைகிறது. அங்கு உப்பு சத்தியாக்கிரக நினைவு தூண் முன் உப்பு எடுக்கும் நிகழ்வுடன் யாத்திரை முடிகிறது.