Enable Javscript for better performance
நகராட்சி மகப்பேறு நிலையங்களில் ஸ்கேன் வசதி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர், கரந்தை மற்றும் கல்லுக்குளத்தில் உள்ள நகராட்சி மகப்பேறு நிலையங்களில் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டது.

    இந்த கருவிகளின் செயல்பாட்டை நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தொடக்கிவைத்தார். பின்னர், அவர் தெரிவித்தது:

    இந்தக் கருவியின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில் ஏற்படும் நோய்கள், சிசு வளர்ச்சியைக் கண்டறிய உதவும். தஞ்சை நகராட்சி பகுதி முழுவதும் ஓராண்டுக்கு சுமார் 2,000 கர்ப்பிணி தாய்மார்களைப் பரிசோதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தப் பரிசோதனைகளைத் தனியாரிடம் சென்று பரிசோதித்தால் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த இரு மகப்பேறு நிலையங்களிலும் இப்பரிசோதனைகளைக் கர்ப்பிணி தாய்மார்கள் இலவசமாகச் செய்து கொள்ளலாம். வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் பரிசோதனை செய்யப்படும் என்றார் சாவித்திரி கோபால்.

    இந்த விழாவில் நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் சிவனேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் எம். மதியழகன், சண்முகவள்ளி பன்னீர்செல்வம், கே. ரேவதி அன்பழகன், கிறிஸ்துவமேரி தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai