Enable Javscript for better performance
பாரதியார் சிலை அமைக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் மகாகவி பாரதியார் சிலை அமைக்க மகாகவி பாரதியார் இலக்கிய மாமன்றம் முடிவு செய்துள்ளது.

    தஞ்சாவூரில் இந்த இலக்கிய மாமன்றத்தின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சொ. வேலாயுதம் தலைமை வகித்தார்.

    பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் மகாகவி பாரதியார் முழு உருவச் சிலையை நிறுவ அனுமதி வழங்கிய கல்லூரி செயலர் புனிதா கணேசனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கல்லூரி வளாகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நாளான வருகிற செப். 11-ம் தேதி பாரதியார் சிலை திறப்பு விழாவை  நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai