Enable Javscript for better performance
\\\"2-ம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி முன்னேற்றம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "2-ம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி முன்னேற்றம்'

    By தஞ்சாவூர்,  |   Published on : 26th April 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் ஜெர்மானிய வரலாற்றுப் பேராசிரியர் டெட்லஃப் பிரீஸன்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், தொல்லியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஜெர்மானிய வரலாறு 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு: ஒரு பார்வை என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

    ஜெர்மனியில் 1937-ல் மக்கள்தொகை 6.7 கோடியாக இருந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் 1.5 கோடி பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 20 லட்சம் பேர் போரின் இறுதியிலோ அல்லது அதன் பிறகோ கொல்லப்பட்டனர். 1.2 கோடி பேர் வீட்டை இழந்தனர். 55 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் பலத்தக் காயமடைந்தனர்.

    இந்தப் போரின் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் மன்னராட்சி நிலை குலைந்தது. இதேபோல, இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சியில் சரிவு ஏற்பட்டது. பிரெஞ்சு நாட்டின் இந்திய - சீன மறு காலனியாதிக்க முயற்சியும் தோல்வியடைந்தது. ஜெர்மனியும் கடைசி காலனி போரில் ரஷ்யாவுக்கு எதிராக தோற்றுப் போனது.2-ம் உலகப் போர் முடிவில் அப்போது மிகப் பெரிய சக்தியாக இருந்த ஐரோப்பாவின் அடிமைப்படுத்தும் செயல் உடைத்தெறியப்பட்டது. மேலும், அரசியல், சமூகச் செல்வாக்கிலும் தோல்வி ஏற்பட்டது.

    இந்தப் போரில் ஜெர்மனி பேரழிவைச் சந்தித்தது என்றாலும், அதன் பிறகு ஜெர்மனியில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டது.

    இப்போது, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி உள்ளது.

    ஜெர்மனியில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 31,000 ஈரோவாக அதிகரித்தது. இது, இந்திய நாட்டின் தனி நபர் வருவாயை விட 10 மடங்கு அதிகம். பொருளாதார வளர்ச்சி விகிதம் 10 சதத்தை எட்டி பல ஆண்டுகளாக நிலையாக உள்ளது.

    இந்திய - ஜெர்மனிய உறவு அறிவுசார் நிலையில் தொடங்கியது. உலகில் பழைமையான மொழிகளில் ஜெர்மானிய மொழியும் ஒன்று. இதேபோல, இந்தியாவில் பழைமையான மொழியாகக் கருதப்படும் சம்ஸ்கிருத மொழியில் ஆய்வு செய்வதற்காக ஜெர்மானிய அறிஞர்கள் இங்கு வந்தனர்.

    ஜெர்மனியில் ஜெர்மானிய மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. அதனால், ஆங்கில மொழி தேவைப்படவில்லை. இப்போது, ஜெர்மனியில் சமத்துவ சமுதாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொழில்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது என்றார் டெட்லஃப் பிரீஸன்.

    பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை பேசியது: ஜெர்மனியில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழியிலான ஏராளமான ஓலைச் சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை. அவற்றைப் படித்து அறிவதற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழறிஞர் அனுப்பி வைக்கப்படுவார் என்றார் திருமலை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai