Enable Javscript for better performance
கல்வியே தேசத்தை சீரமைக்கும் கருவி- Dinamani

சுடச்சுட

    

    கல்வியே தேசத்தை சீரமைக்கும் கருவி என்றார் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. முத்துச்செழியன்.

    தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 57-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழாவில் அவர் பேசியது:

    ஐரோப்பாவில் 1980-களில் இளைஞர்களின் சக்தியால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியா தற்போது கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றுள்ளது.

    இளைஞர்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உலகில் எங்கு சென்றாலும் கல்வி கைகொடுக்கும். எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற கல்வி மிகவும் அவசியமானது. அந்தக் கல்விதான் நம்மை இணைத்துவைத்துள்ளது என்றார் முத்துச்செழியன்.

    கல்லூரிச் செயலர் கே. துளசிஅய்யா வாண்டையார் தலைமை வகித்தார்.  து. கிருஷ்ணசாமி வாண்டையார், கல்லூரி முதல்வர் உரு. ராசேந்திரன், புலத் தலைவர்கள் என். ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai