Enable Javscript for better performance
சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்- Dinamani

சுடச்சுட

    

    சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்

    By தஞ்சாவூர்  |   Published on : 27th April 2013 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர் காப்பீட்டுத் தொகை சில விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன், பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்குமா எனக் கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பன் பேசியது: மாவட்டத்தில் சுமார் 400 இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மே 31-ம் தேதிக்குள் முழுவதுமாக முடிக்கப்பட்டு புள்ளியியல் துறை மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆனால், 400 இடங்களிலும் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஒரு சில வருவாய் சரகங்களில் மட்டுமே மகசூல் குறைவாக இருந்தது. எனவே, சில விவசாயிகளுக்கு மட்டும்தான் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

    காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் மாவட்ட செயலர் சுவாமிமலை விமல்நாதன்: திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, அம்பிகா சர்க்கரை ஆலை ஆகியன அரைவை செய்த கரும்புக்கு சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமாக பணம் பட்டுவாடா செய்யாமல் விவசாயிகளை அழைக்கழிக்கின்றனர். விதிகளின்படி 14 நாட்களுக்குப் பின்னர் வழங்கப்படும் பணத்துக்கு 15 % வட்டி சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக ஆட்சியர் உத்தரவிட்டும் அதை மதிக்காத ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், பல கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ள ஆலை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தவும் முதல்வருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

    அம்பிகா சர்க்கரை ஆலை அலுவலர் பேசியது: ஏற்கெனவே விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மே 31-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைவருக்கும் பட்டுவாடா செய்யப்படும்.

    வா. வீரசேனன்: பட்டுக்கோட்டை - மன்னார்குடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களை விவசாயம் செய்ய விடாமல் ரயில்வே நிர்வாகமும், அதன் ஒப்பந்ததாரர்களும் தடுத்து வருகின்றனர். ரயில் பாதை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி தராத நிலையில், விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காத நிலையில் ரயில்வே துறையால் விளைநிலங்கள் அபகரிப்பட்டுள்ளன. எனது நிலம் அபகரிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது புகார் செய்தும், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

    மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்:  நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அது ஆக்கிரமிப்புதான் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai