Enable Javscript for better performance
தாய்மொழியில் மின் ஆளுகை உருவாக்கப்பட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தாய்மொழியில் மின் ஆளுகை உருவாக்கப்பட வேண்டும்

    By 'தஞ்சாவூர்,  |   Published on : 27th April 2013 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தாய்மொழியில் மின் ஆளுகை உருவாக்கப்பட வேண்டும் என்றார் இந்திய மென்பொருள் நிறுவனத் தந்தையும், டி.சி.எஸ். நிறுவனத்தின் முதல் தலைமைச் செயல் அலுவலருமான எப்.சி. கோஹ்லி.

    பெரியார் மணியம்மை பல்கலைக்கழத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலம் அவர் மேலும் பேசியது:

    பிளஸ் 2 வகுப்பில் சிறப்பு பயிற்சியின்றி நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் நான்காண்டு இளநிலை பொறியியல் படிப்புக்குப் பிறகு நடுத்தர மதிப்பெண் எடுக்கும் மாணவர்களாக மாற்றப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் அறியப்பட வேண்டும்.

    நாட்டில் 70 % கிராமப்புறங்களாக இருந்தாலும் விவசாய உற்பத்தி சீனாவை விட பாதியாகவும், கலிபோர்னிய மாகானத்தின் உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் இதை ஈடு செய்ய வேண்டும்.

    நாட்டில் ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    10 பில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள்கள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தவிர்த்து அவற்றை நமது கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

    தாய்மொழியில் மின் ஆளுகை உருவாக்கப்பட  வேண்டும். இதனை முதலில் நீதித் துறையில் கொண்டுவர வேண்டும் என்றார் கோஹ்லி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai