தீக்காயமடைந்த இளைஞர் சாவு
By திருச்சி, | Published on : 27th April 2013 05:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி உறையூர் பகுதியில் குடும்பத் தகராறில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
உறையூர் வடிவேல் நகர் 4-வது குறுக்குச் சாலையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் தன்ராஜ் (30). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், மது அருந்திவந்து பெற்றோரிடம் தகராறு செய்வாராம். இதையடுத்து தன்ராஜுக்கு அவரது பெற்றோர் அறிவுரை கூறினார்களாம். இதனால் மனமுடைந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தன்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார்.
உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
செல்போன் திருட்டு:
திருவானைக்கா சிவராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது வீட்டுக்கு உறவினரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்திருந்தாராம். சென்னை செல்வதற்காக வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு வந்த போதுதான் தன்னுடைய பையில் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போன் காணாமல் போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.