Enable Javscript for better performance
விபத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    போவூரணி அருகே அரசுப் பேருந்து மோதியதில் சுமை ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 3 பேர் பலத்தக் காயமடைந்தனர். 2 மாடுகள் உயிரிழந்தன.

    பட்டுக்கோட்டையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆவணம் சாலையில் சென்றபோது, எதிரே, ஐஸ் கட்டிகள் ஏற்ற பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த சுமை ஆட்டோ மீது மோதியது.

    இதில் சுமை ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.  இதில் சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி (20) அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆட்டோ கிளீனர் புதுக்கோட்டை தொண்டைமான் நகரைச் சேர்ந்த பாலமுத்து மகன் சோமசுந்தரம் (20) மற்றும் இச்சம்பவத்தின் போது மாட்டுவண்டி ஓட்டிச் சென்ற செருவாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் (42), துரை (45) ஆகியோரும் பலத்தக் காயமடைந்தனர். சிதம்பரத்தின் இரண்டு மாடுகளும் உயிரிழந்தன. காயமடைந்த மூவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai