Enable Javscript for better performance
வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

    பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், கல்வியாண்டு முடிந்த பின்னரும் ஆதிதிராவிடர், பழங்குடியினமாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் இரா. மாரிமுத்து தலைமை வகித்தார். தலைவர் சதா. சிவக்குமார், நிர்வாகிகள் வைத்திலிங்கம், அம்பேத்கர்தாசன், கோ. சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai