Enable Javscript for better performance
உறவினரை கொல்ல முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அக்காள் கணவரை கொலை செய்ய முயன்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    பாபநாசம் காவல் சரகம், சாலபோகம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் புண்ணியமூர்த்தி(30) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் உத்தமதானபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு முன் குடும்பப் பிரச்னை காரணமாக நதியா இறந்துவிட்டார். இந்நிலையில் ஏப்.26 அன்று புண்ணியமூர்த்தி உத்தமதானபுரத்திற்கு பேருந்தில் வந்துள்ளார். அதே பேருந்தில் இறந்து போன நதியாவின் சகோதரர் யுவராஜூம் வந்துள்ளார். கோபுராஜபுரம் நிறுத்தத்தில் புண்ணியமூர்த்தி கீழே இறங்கியபோது அவரை தொடர்ந்து வந்த யுவராஜ் புண்ணியமூர்த்தியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புண்ணியமூர்த்தியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டாராம். காயமடைந்த புண்ணியமூர்த்தி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்கு பதிந்து யுவராஜை கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai