Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை பேரணி, விளக்கக் கூட்டம் நடத்தினர்.

    ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதிய விகிதம் வழங்க வேண்டும். சட்ட ரீதியான குடும்பப் பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நீதிமன்றத் தீர்ப்புப்படி தகுதியுள்ள சமையல் உதவியாளர்களுக்கு சமையலராகப் பதவி உயர்வு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்தப் பேரணியை சிவகங்கை பூங்கா எதிரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் குருசாமி தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து சோழன் சிலை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது.

    இதையடுத்து, நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். மனோகரன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai