Enable Javscript for better performance
டிராக்டர் உதிரி பாகம் திருடியவர்களுக்கு 2 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    டிராக்டர் உதிரி பாகம் திருடியவர்களுக்கு 2 ஆண்டு சிறை

    By ஒரத்தநாடு,  |   Published on : 28th April 2013 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே டிராக்டர் உதிரி பாகம் திருடிய வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளுர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவரது மகன் ராஜதுரை (36). கடந்த ஜன.19- ல் இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடு போயின.

    இது குறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து

    அதே ஊரைச் சேர்ந்த ராஜப்பா (30), மயிலாடுதுறை நாகம்பாடியைச் சேர்ந்த நாகரெத்தினம் (60) ஆகிய இருவரையும் கைது செய்து, ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஏ.பி. நசீர்அலி இருவருக்கும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai