Enable Javscript for better performance
தஞ்சையில் நுண்துளை சிறுநீரக அறுவை சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    டெல்டா மாவட்ட பகுதிகளில் முதல் முறையாக நவீன நுண்துளை (லேப்ராஸ்கோபிக்) முறை சிறுநீரக அறுவை சிகிச்சை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து மருத்துவமனை சிறுநீரக நிபுணர் ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: சிலருக்கு பிறவிக் கோளாறு காரணமாக சிறுநீரகத்தில் நோய் ஏற்பட்டு, சிறுநீர் குழாயில் அடைப்பு உருவாகி பெரும் பிரச்னையாகிறது. இதனால் நீர் இறங்காமல் சிறுநீரகம் வீங்கி விடும்.

    இதனை சரிசெய்ய பொதுவாக வயிற்றில் சுமார் 30 செ.மீ. நீளத்துக்குக் கிழித்து  அடைப்பு சரி செய்யப்படும். ஆனால், தற்போது மீனாட்சி மருத்துவமனையில் வயிற்றைக் கிழிக்காமல் நான்கு நுண்ணிய துளைகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த முறையால் நோயாளிக்கு வயிற்றில் பெரிய தழும்புகள், மற்ற பிரச்னைகள் ஏற்படாது, வலியும் குறையும் என்றார் ரவிச்சந்திரன். மருத்துவமனை மேலாளர் எஸ். மணிவாசகம் உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai