Enable Javscript for better performance
தஞ்சை மாவட்டத்துக்கு கூடுதலாக ரூ. 500 கோடி கடன்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை மாவட்டத்துக்கு கூடுதலாக ரூ. 500 கோடி கடன்

    By தஞ்சாவூர்,  |   Published on : 28th April 2013 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்டத்துக்குக் கூடுதலாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    2013 - 14 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக் கடன் திட்டம் மாவட்டத்தின் முக்கிய தேவைகளைக் கருத்தில் கொண்டு துறை வாரியான நிதி ஒதுக்கீடுகள் ரூ. 500 கோடி மதிப்புக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதிய திட்டப்படி விவசாயத்துக்கு ரூ. 3,016.62 கோடி மதிப்பிலும், விவசாயம் சாரா பிரிவுகளுக்கு ரூ. 223.31 கோடி மதிப்பிலும், மற்ற முன்னுரிமைப் பிரிவுகளுக்கு ரூ. 656.39 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ. 3,896.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகைகள் பொதுமக்களுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் ரூ. 2,829.15 கோடி மதிப்பிலும், தனியார் துறை வங்கிகள் மூலம் ரூ. 874.96 கோடி மதிப்பிலும், கூட்டுறவுத் துறை வங்கிகள் மூலம் ரூ. 159.77 கோடி மதிப்பிலும், மண்டல கிராம வங்கிகள் மூலம் ரூ. 21.27 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ. 11.17 கோடி மதிப்பிலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு கடன்கள் வழங்கப்படும்.

    வங்கியாளர்கள் வறட்சி நிவாரணம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு மூலம் ஓய்வூதியம் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களுக்குச் சேமிப்புக் கணக்குத் தொடங்குதல் என்பன உள்ளிட்ட அரசுப் பங்களிப்புடன் கூடிய திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் பாஸ்கரன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ரகுவத்ஸசாரி, நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் ரவிக்குமார், முன்னோடி வங்கி மேலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai