Enable Javscript for better performance
திருவையாறில் ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவையாறில் ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா தொடக்கம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 28th April 2013 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா சனிக்கிழமை தொடங்கியது.

    திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரைப் பெருவிழா ஏப். 16-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை பல்லக்கு, இரவில் பல்வேறு வாகனப் புறப்பாடும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஏப். 24-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த விழாவின் பிரதான வைபவமான ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா சனிக்கிழமை தொடங்கியது. காலையில் கிழக்குக் கோபுர வாசலில் கோபுர தரிசனம் நடைபெற்றது.

    இதில், அருள்மிகு ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கிலும் (கண்ணாடி பல்லக்கு), புதுமணத் தம்பதியான நந்தியெம் பெருமான் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து, இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்று அங்குள்ள பல்லக்குடன், திருச்சோற்றுத்துறைக்குச் சென்றன. தொடர்ந்து, திருவேதிக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரிலுள்ள பல்லக்குடன் தில்லைஸ்தானத்துக்கு இரவு சென்றடைந்தது. அங்கு 7 பல்லக்குகளும் முகாமிட்டன. இந்தப் பல்லக்குகள் ஒவ்வொன்றாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புறப்பட்டு திருவையாறு தேரடி திடலை சென்றடையும். தேரடியில் மாலை பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி மகிழ்ச்சி முழக்கமிடுவர்.

    அதன் பின்னர், ஏழூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று சிரம பரிகாரம் செய்து நீர் மோர், பானகம் அருந்தி மரியாதைகள் பெற்று, ஒவ்வொன்றாக சொந்த ஊருக்குத் திரும்பும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai