Enable Javscript for better performance
துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளில் பணிபுரியும்  துப்புரவு தெழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீரத்தேக்க தொட்டி இயக்குநர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஒன்றிய செயலர் சி. ஜெயபால் தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலர் பி.எம். காதர்உசேன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குந ர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai