Enable Javscript for better performance
பல்லக்கு விழுந்து 5 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை பல்லக்கு விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா சனிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் திருவையாறிலிருந்து புறப்பட்ட பல்லக்கு திருப்பழனத்துக்குச் சென்றது. அங்கு பல்லக்கை கீழே வைத்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தூக்கினர்.

    அப்போது, வியர்வை காரணமாக பல்லக்கு கை நழுவியதாகக் கூறப்படுகிறது. இதில், பல்லக்கை தூக்கிய திருப்பழனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தியாகு (33), ராஜராஜன் (22), திருநாவுக்கரசு (32), ஜயராமன் (24) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் ராஜேந்திரன், தியாகு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருவையாறு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai