Enable Javscript for better performance
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன்.- Dinamani

சுடச்சுட

    

    பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன்.

    By தஞ்சாவூர்  |   Published on : 28th April 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மகளிர் விழா மாநிலக் கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:

    பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.  இருப்பினும் பெண்சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், பெண் அடிமைத்தனம், பாலியியல் கொடுமை, வரதட்சிணை கொடுமை போன்ற நிகழ்வுகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. இதைப் போக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். மேலும், நம் நாட்டில் சாதனை செய்த பெண்கள் நிறைய பேர் இருந்துள்ளனர். அவர்களைப் போல அவர்களுடைய பாதையைப் பின்பற்றி இக்காலப் பெண்களும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்க வேண்டும்.  சிறு குழந்தைகளுக்கு ஆத்திசூடி, அரிச்சுவடி போன்ற நூல்களில் கூறப்படும் செய்திகளைக் கூறி சமுதாயத்தில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றார் முத்துக்குமரன்.

    விழாவுக்குத் தலைமை வகித்த துணைவேந்தர் ம. திருமலை பேசியது:

    சங்க காலம் தொட்டு அனைத்து துறைகளிலும் பெண்களே முதன்மையானவர்களாக இருந்து வந்தனர். இரும்பு சாதனங்கள் அறிமுகமான பிறகு அவற்றைப் பயன்படுத்த ஆண்கள் வந்ததால் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெண்கள் தங்களுடைய உடலை வலிமையாக வைத்துக் கொள்வதுதான் அழகு.  தற்போதுள்ள சமுதாயத்தில் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாகப் பார்க்கின்றனர்.  அதிலிருந்து விடுபட திரைப்படம் வாயிலாக வரும் காட்சிகளைத் தடை செய்ய வேண்டும். மேலும், பெண்கள் உடல் வலிமை மூலம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள  வேண்டும் என்றார் திருமலை.

    அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. புரட்சிக்கொடி, வழக்குரைஞர் வெ. கண்ணுக்கினியாள், தொல்லறிவியல் துறைத் தலைவர் ச. பரிமளா, இலக்கியத் துறை உதவிப் பேராசிரியர் க. திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இ. அங்கயற்கண்ணி வரவேற்றார். முனைவர் வா. ஹசீனாபேகம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai