Enable Javscript for better performance
மே 1-ல் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் மேலும் தெரிவித்திருப்பது: இந்தக் கூட்டத்தில் குடிநீர் விநியோகம், தமிழக முதல்வரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு என்பன உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

    இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி கிராம வளர்ச்சிக்காக ஒத்துழைக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai