Enable Javscript for better performance
உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

    By பாபநாசம்,  |   Published on : 29th April 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உப்பு சத்தியாகிரக 83 ஆம் ஆண்டு நினைவு பாதயாத்திரை குழுவினருக்கு கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்  சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சியில் இருந்து தொடங்கிய சுமார் 50 பேர் கொண்ட பாத யாத்திரை குழுவினர் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசன் தலைமையில் வேதாரண்யம் செல்கின்றனர்.

    இக்குழுவினர் தஞ்சை, திருவையாறு, பாபநாசம் வழியாக ஏப்.26 ஆம் தேதி இரவு கும்பகோணம் வந்தனர். அவர்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்  செயலர் ராம்குமார் தலைமையில் நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நகர தலைவர் பி.எஸ். சங்கர், துணை தலைவர்கள் சிவா, சாதிக் அலி, செயலர்கள் கோவிந்தராஜன், சுதர்சனன், முருகன், தேசிய ஆசிரியர் பிரிவு மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட கட்சியினர் பலர் குழுவினரை வரவேற்றனர்.

    பாபநாசத்தில்...

    பாபநாசத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவினருக்கு பாபநாசம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ. ஹாஜாஷெரீப், நகர செயலர் ஆர். பூபதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதயாத்திரை குழுவினர் பாபநாசம் நகரில் கூடியிருந்த மக்களிடையே காந்தீய கொள்கைகளை விளக்கி காந்தீய வழியில் நடப்போம், மதுவை ஒழிப்போம் என முழக்கமிட்டனர். இதில் பாபநாசம் நகர பொறுப்பாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி தலைவர் பாண்டியன், வட்டார செயலர் அப்துல்ரசீத், தொகுதி செயலர் முருகராஜ், நகர இளைஞரணி தலைவர் சுரேந்தர்பிச்சை, வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai