Enable Javscript for better performance
ஒப்பிலியப்பன் கோவிலில் கனகாபிஷேகம் - Dinamani

சுடச்சுட

    

    ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீவேங்கடாசலபதி பெருமாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கனகாபிஷேகம் மற்றும் பட்டாபிஷேக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 வைணவ தலங்களில் மிகவும் சிறப்புடைய தலமாக திகழும் கும்பகோணம் அருகேயுள்ள திருவிண்ணகர் என போற்றப்படுவது ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி திருக்கோவிலாகும்.

    பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி, சீதா கல்யாணம், கனகாபிஷேகம், பட்டாபிஷேகம் ஆகியவை வெகு சிறப்பாக 11 நாட்களுக்கு நடைபெறும்.

    இந்த ஆண்டு இவ்விழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக

    ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ லட்சுமணர் ஆகியோருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, 1008 பொற்காசுகள் கொண்டு கனகாபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து முல்லை, மல்லிகை, வெள்ளை தாமரை, வெள்ளை அரளி, சிவப்பு அரளி உள்ளிட்ட பல்வகை வண்ண மலர்களை கொண்டு விசேஷ மலர் அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    29 ஆம்தேதி அனுமன் கனகாபிஷேகத்துடன் விழா  நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai