Enable Javscript for better performance
தம்பதி தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    அதிராம்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

    செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மா. பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி ராஜாத்தி (21), தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி. இவர்களுக்கு கடந்த 29.6.2011-ல் திருமணம் நடந்தது, குழந்தை இல்லை. இந்நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டு உத்திரத்தில் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனராம்.

    அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் தம்பதி தற்கொலை செய்து கொண்டிருப்பதால்  பட்டுக்கோட்டை ஆர்டிஒ  ரஹமத்துல்லாகானும் விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai