Enable Javscript for better performance
திருவையாறில் பொம்மை பூ போடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை பொம்மை பூ போடும் விழா நடைபெற்றது.

    திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரைப் பெருவிழா ஏப். 16-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் பிரதான வைபவமான ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, அருள்மிகு ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கிலும் (கண்ணாடி பல்லக்கு), புதுமணத் தம்பதியான நந்தியெம் பெருமான் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்குச் சென்றன. மேலும், அந்தந்த ஊரிலுள்ள பல்லக்குடன் இணைந்து தில்லைஸ்தானத்துக்கு இரவு சென்றடைந்தன. அங்கு 7 ஊர் பல்லக்குகளும் முகாமிட்டன.

    இந்தப் பல்லக்குகள் ஒவ்வொன்றாக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திருவையாறு தேரடி திடலை சென்றடைந்தன. தேரடியில் இரவு பொம்மை பூ போடும் விழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர், ஏழூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று சிரம பரிகாரம் செய்து நீர் மோர், பானகம் அருந்தி மரியாதைகள் பெற்று, ஒவ்வொன்றாக சொந்த ஊருக்குத் திரும்பின.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai