Enable Javscript for better performance
பல்லக்கு விழுந்த விபத்தில் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பல்லக்கு விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழாவில் திருவையாறிலிருந்து புறப்பட்ட பல்லக்கு திருப்பழனத்துக்குச் சென்றது. அங்கு பல்லக்கை தூக்கும் போது, கை நழுவியதாகக் கூறப்படுகிறது. இதில், பல்லக்கை தூக்கிய திருப்பழனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தியாகு (33), ராஜராஜன் (22), திருநாவுக்கரசு (32), ஜயராமன் (24) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் பலத்தக் காயமடைந்த ராஜேந்திரன், தியாகு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.திருவையாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai