மத்திய அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் தொடக்கம்
By தஞ்சாவூர் | Published on : 29th April 2013 04:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
தஞ்சை மறை மாவட்ட மேய்ப்புப் பணி பேரவை, எஸ்.சி., எஸ்.டி. தேசியப் பணிக் குழு சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தொடக்கி வைத்தார்.
இந்தப் போராட்டத்தில் தஞ்சை மறை மாவட்டம் சார்பில் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது.
இதில், முதல் கட்டமாக 500 அஞ்சல் அட்டைகள் சனிக்கிழமை அனுப்பப்பட்டன.
அருள்பணி நிலைய இயக்குநர் சவரிமுத்து, தஞ்சை மறை மாவட்ட மேய்ப்புப் பணிப் பேரவைச் செயலர் கிளமென்ட் அந்தோணிராஜ், திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் தேவநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தஞ்சை மறைமாவட்ட மேய்ப்புப் பணி பேரவைக் கூட்டம் நடைபெற்றது.