Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

    By கும்பகோணம்  |   Published on : 29th April 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இத் தொகுதி உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகனின்  மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு வேண்டிய உபகரணங்களான மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால் மற்றும் கருப்புக்கண்ணாடி ஆகியவை வழங்குவதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் குழுவினர் நேரில் ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் முகாம் எம்எல்ஏ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

    முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சியாமளா, அரசு மருத்துவமனை முடநீக்கியல் மருத்துவர் சந்திரசேகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அவர்களுடைய ஊனத்திற்கு ஏற்றவாறும், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாம் குறித்து  எம்.எல்.ஏ. அன்பழகன் செய்தியாளர்களிடம்  கூறியது:

    மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வரை செலவிடப்பட உள்ளது. அதன்படி இத் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கவும், அரசின் மற்ற சலுகைகள் பெறவும் இந்த மதிப்பீட்டு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றுத்திறனாளிகளும் இங்கு பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அனைத்து உடல் உறுப்புகளும் நன்றாக செயல்படும் நம்மை போன்ற மனிதர்களே கடும் துயரப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு  அரசு உதவி வருகிறது. தனிப்பட்ட முறையில் நானும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கிறேன் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai