Enable Javscript for better performance
ரயில் நிலைய அலுவலகத்தில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ரயில் நிலைய அலுவலகத்தை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில், நிலைய அலுவலரான நடராஜன், சனிக்கிழமை  இரவு ரயில் டிக்கெட் விற்ற பணம் ரூ. 1005-ஐ திருநாகேஸ்வரம் ரயில்வே அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டு சென்றார். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்திற்கு வரும் போது, அலுவலக கதவு உடைக்கப்பட்டு ரூ. 985 திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் கும்பகோணத்தை சுற்றியுள்ள தாராசுரம், சுவாமிமலை, திருவிடைமருதூர், பசுபதி கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட 5 ரயில்வே நிலையங்களில்  திருடர்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனராம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai