Enable Javscript for better performance
காலபைரவர் கோவிலில் மே 2-ல் அஷ்டமி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வரும் 2-ம் தேதி கால பைரவர் அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது.

    அம்மன் ஞானாம்பிகையை சப்தரிஷீஸ்வரருக்கு 7 ரிஷிகளும் சேர்ந்து திருக்கல்யாணம் செய்து வைத்த இத்தலத்தில், எழுந்தருளும் காலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    அதன்படி இந்தக் கோவிலில் மே 2-ம் தேதி மாலை 5 மணியளவில் கால பைரவர் அஷ்டமி பெருவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வடைமாலை அணிவித்து, 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai