Enable Javscript for better performance
\\\"சிவகங்கை பூங்கா வசூலில் முறைகேடு\\\'- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் நிலவும் முறைகேடுகள் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற நகர் மன்றக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்:

    எஸ். சதாசிவம், திமுக: மேம்பாலம், சிவாஜி நகர் பகுதிகளில்  ஒரு வாரமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    பொறியாளர் சீனிவாசன்: இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சண். ராமநாதன், திமுக: பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதுகுறித்து 6 மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வந்தும், உரிய நடவடிக்கை இல்லை.

    பொறியாளர்:திருமானூர் நீரே ற்று நிலையத்திலிருந்து 2.30 கோடி லிட்டர், 102 சிறிய விசை பம்புகள் மூலம் கிடைக்கும் குடிநீரையும் சேர்த்து மொத்தம் 2.90 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இப்போதைக்குப் பற்றாக்குறை இல்லை. குடிநீர் குழாயில் சிலர் மோட்டார் பொருத்தி உறிஞ்சுவதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக இந்த வாரம் சோதனை நடைபெறவுள்ளது.

    பி. ராஜேஸ்வரன், அதிமுக: தஞ்சாவூர் நகராட்சிக்கு 3.50 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், வெண்ணாறு நீரேற்று நிலையத்தை சீரமைத்து மீண்டும் இயக்க வேண்டும்.

    பொறியாளர்: கோடைகாலத்தில் வெண்ணாற்றில் 4 மாதங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்பதால் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக நகரில் 7 இடங்களில் ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் பெரம்பூரில் புதிய நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ராமநாதன்:  சிவகங்கை பூங்காவில் சைக்கிள் நிறுத்த  நுழைவு கட்டண ரசீது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆணையர்  ரவிச்சந்திரன்: இது தொடர்பாக ஒருவர் பணியிடை நீக்கமும், மற்றொருவர் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதன்: பூங்காவில் பணிபுரியும் அனைவருக்கும் முறைகேடுகளில் தொடர்பு உள்ள நிலையில், இருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்கா வருவாய் பிரிவை கணினிமயமாக்க வேண்டும்.

    ஆணையர்: ஆதாரங்கள் இருந்தால் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கணினிமயமாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எம். சுவாமிநாதன், அதிமுக: கடந்த ஆட்சியில் இப்பூங்காவில் உள்ள செயற்கை நீருற்று மையத்தில் குளிக்க 120 பேருக்கு ரசீது கொடுக்காமலேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கையும் களவுமாகப் பிடித்து தகவல் கொடுத்தும், நடவடிக்கை இல்லை.

    இதையடுத்து, திமுக ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து அதிமுக உறுப்பினர்கள் பேசினர். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர், 25-வது வார்டில் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாக பாட்டிலில் நிரப்பப்பட்ட தண்ணீரைக் காட்டி உறுப்பினர் டி. சந்தானகிருஷ்ணன் பேசினார்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளரிடம் ஆணையர் அறிவுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai