Enable Javscript for better performance
சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 30th April 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தஞ்சையில் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பதவி உயர்வில் காலம் தாழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும். அரசு விடுமுறை நாள்களிலும் மிரட்டி வேலை வாங்குவதைக் கைவிட வேண்டும். பிற ஊழியர்களின் வேலைகளைத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துணை செவிலியர்களைத் துணை சுகாதார மையப் பணிகளுக்கு அனுப்புவதைக் கைவிட வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப துணை சுகாதார நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். இந்திரா தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஆர். ஜான்சிராணி, துணைத் தலைவர் என். புவனசுந்தரி, எம். சந்தானமேரி, எஸ். மகேஸ்வரி, எஸ். சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai