Enable Javscript for better performance
சென்னையில் நாளை முற்றுகைப் போராட்டம் - Dinamani

சுடச்சுட

    

    முகாம்களிலிருந்து இலங்கை அகதிகளை விடுவிக்க வலியுறுத்தி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புதன்கிழமை (மே 1) முற்றுகைப் போராட்டம் நடத்த மக்கள் கலை இலக்கியக் கழகம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கழகத்தின் மாநில இணைச் செயலர் காளியப்பன் தெரிவித்திருப்பது:

    தமிழகத்தில் உள்ள முகாம்களில் சுமார் 70,000 ஈழத் தமிழர்கள் அகதிகளாக, அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான  அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதல்வர் தனது அதிகாரத்தின் கீழ் இயங்கும் சிறப்பு அகதிகள் முகாம்களை உடனே அகற்றி அங்குள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஈழ அகதிகள் மீதான காவல் துறை கண்காணிப்பு நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai