பேசும் கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
By தஞ்சாவூர், | Published on : 30th April 2013 04:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் பேசும் கலை வளர்க்கும் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜேசீஸ் அமைப்பு சார்பில் விருந்தோம்பலில் பேசும் கலைப் பயிலரங்கம் என்ற மண்டல அளவிலான பயிற்சி முகாம் மீனாட்சி மருத்துவமனையில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் மருத்துவமனையின் நிறுவனர் என். சேதுராமன் சிறப்புரையாற்றினார்.
இந்தப் பயிலரங்கத்தில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 34 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளர் எம். வெங்கடாசலம், இணைப் பயிற்சியாளர் எம்.எஸ். சரண், வி. கருணாகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முன்னதாக, தொடக்க விழாவில் ஜேசீஸ் மண்டலத் தலைவர் எஸ். கதிர்வேல், துணைத் தலைவர் ஆர். காண்டீபன், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் எம்.எஸ். ஆசிப் அலி, மருத்துவமனை மேலாளர் எஸ். மணிவாசகம், விருந்தோம்பல் கிளை இயக்கத் தலைவர் கே.ஆர். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.