Enable Javscript for better performance
பேருந்து கவிழ்ந்து 37 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சாலியமங்கலம் அருகே அரசுப் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் 37 பேர் காயமடைந்தனர்.

    நாகப்பட்டினத்திலுருந்து தஞ்சாவூர் நோக்கி திங்கள்கிழமை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருவெரும்பூரைச் சேர்ந்த சா. கருணாநிதி (58) ஓட்டினார்.

    சாலியமங்கலம் அருகே எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது எதிர்பராதவிதமாக வாய்க்காலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

    இதில், பேருந்து நடத்துநர் கோவத்தகுடி சிவானந்தம் (48) உள்ளிட்ட 37 பேர் காயமடைந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai