Enable Javscript for better performance
முன்னறிவிப்பு செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அத்தியாவசியத் தேவையான குடிநீர் விநியோகத்தை நிறுத்தும்போது முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என கும்பகோணம் நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  நகர் மன்றத் தலைவர் ரத்னா சேகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நடந்த விவாதம்:

    புவனேஸ்வரி, அதிமுக: 9-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டும், பணிகள் தொடங்கப்படவில்லை.

    தலைவர்: விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

    பிரபு பரமசிவம், அதிமுக: குடிநீர் விநியோகத்தை நிறுத்தும்போது முன்னறிவுப்பு செய்துவிட்டே நிறுத்த வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்படுவதில்லை.

    தலைவர்: குடிநீர் அத்யாவசியமானது என்பதால், அலுவலர்கள், முன்னறிவிப்பு செய்தே நிறுத்த வேண்டும்.

    சு.ப. தமிழழகன், திமுக : 2 வேளையும் குடிநீர் தருவதாக வாக்கு கேட்டு தலைவர் பிரசாரம் செய்தார். ஆனால் ஒரு வேளை மட்டுமே வழங்கப்படுகிறது.

    தலைவர்: அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சீனிவாசன், திமுக: 4-வது வார்டில் சுகாதார பணிகள் முறையாக நடைபெறுவதில்லை, சாக்கடை தேங்கி நிற்கிறது.

    தலைவர்:  சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீனிவாசன், திமுக: கும்பகோணம் நகரில்  பயணிகளுக்கான ஏ.சி. நிழற்குடை அமைக்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடமான மேலக்காவேரியிலும் இதனை அமைக்க வேண்டும்.

    தலைவர்: அடுத்த திட்டத்தில், அன்பளிப்பாளர் மூலம் செய்யப்படும்.  கூட்டத்தில், துணைத் தலைவர் ராஜா நடராஜன், ஆணையர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai