Enable Javscript for better performance
லாரி மோதி பேராசிரியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே லாரி மோதியதில் தனியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் கோபிசந்த் (36).

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் வசித்து வந்தார்.

    திங்கள்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, வல்லத்தை அடுத்த தேவாரம் நகர் அருகே, லாரி மோதி கோபிசந்த் உயிரிழந்தார்.இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரணை

    மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai