Enable Javscript for better performance
11 பேருக்கு உதவித் தொகை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, கல்விக் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 371 மனுக்கள் பெறப்பட்டன.

    மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

    மேலும், 11 பயனாளிகளுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai