பாபநாசத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பள பட்டியலை தவறாக பயன்படுத்தி, ரூ. 4 லட்சம் மோசடி செய்தது புதன்கிழமை தெரிய வந்தது.
கும்பகோணம் இளங்கோ நகரை சேர்ந்தவர் அன்புசெல்லையா (48). இவரது நண்பர் கதிராமங்கலத்தை சேர்ந்த ஸ்டீபன்.
பாபநாசத்திலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஸ்டீபன் கடன் பெற அன்புசெல்லையா தனது சம்பள சான்றிதழின் நகலை கொடுத்தாராம். இதே நிதி நிறுவனத்தில் தாராசுரத்தைச் சேர்ந்த ஒருவர் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், நிதி நிறுவன ஊழியர்களில் சிலர் அன்புசெல்லையாவின் சம்பள சான்றிதழை மோசடியாக பயன்படுத்தி கடன் கேட்ட தாராசுரம் நபருக்கு 9.12.13 அன்று ரூ. 4 லட்சம் கடன் கொடுத்துள்ளனர்.
கடன் பெற்றவர் கடன் தொகையை சரிவர செலுத்தாததால், நிதி நிறுவனம் சார்பில் அன்புசெல்லையாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாம். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நோட்டீûஸ எடுத்துக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது. அன்புசெல்லையா அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளர் முத்துசாமி, நிதி நிறுவனத்தின் மீதும், மோசடியாக கடன் பெற்ற நபர் மீதும் வழக்குப் பதிந்து
விசாரணை மேற்கொண்டுள்ளார்.